மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் சட்டப்பேரவையில் அறிவித்தபடி கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை, இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கோயில் துணை ஆணையாளர் ரமேஷ் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டுகளை வழங்கினார். ஏற்கெனவே, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் அழகர் கோவில், திருப்பரங்குன்றம் கோயில்களில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
மதுரையில் மட்டும் இந்து அறநிலைத்துறை சார்பாக 3 கோயில்களில் இலவச லட்டு பிரசாதம் நாள் முழுவதும் அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.