திருமயத்தில் இலவச மருத்துவ முகாமில் 300 பேருக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருமயத்திலுள்ள முத்துமாரி மருந்தகம் மற்றும் மருத்துவமனை சார்பில் ஸ்டேட் வங்கி அருகில் நடைபெற்ற சிறப்பு முகாமில் அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியரும் மருத்துவருமான பி. கண்ணன் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தார்.
ரத்தத்தில் சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு, உடல் எடை, உடல் வெப்பநிலை உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு பரிசோதனை செய்தார். காலை 8 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற்ற முகாமில் கலந்து ஆண்கள், பெண்கள் உள்பட்ட 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனை செய்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.