Close
நவம்பர் 22, 2024 10:39 காலை

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் குடியரசு தின விழாவையொட்டி வினாடி வினா போட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா

புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில்75 ஆவது குடியரசு தின விழாவையொட்டி புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் தேசியக் கொடியினை நிர்வாகி டாக்டர் ராமசாமி ஏற்றி வைத்தார்.

 பின்னர் பள்ளி மாணவ மாணவியருக்கான வினாடி வினா போட்டிநடைபெற்றது. போட்டியை மாமன்னர் கல்லூரி பேராசிரியர் கணேசன் நடத்தினர். போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

முதல் பரிசு ரூபாய் 2000 -ம் மணவிடுதி அரசு பள்ளி மாணவிகளும்  இரண்டாம் பரிசு 1500 ரூபாய் புதுக்கோட்டை வைரம் பள்ளி மாணவிகளும்   மூன்றாம் பரிசு  1000 ரூபாய் வல்லத்திராக்கோட்டை அரசு பள்ளி மாணவர்களும் பெற்றனர் வெற்றி பெற்றவர்களுக்கும்  போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

போட்டிக்கான ஏற்பாடுகளை அலுவலர் மன்ற நிர்வாகிகள் டாக்டர் ராமசாமி, பேராசிரியர் ரமேஷ், டாக்டர் நடனம், பொறியாளர் காமாட்சி, பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர்  அண்ணாமலை பாண்டியன் .பொறியாளர் அருளானந்து,  சந்திரசேகரன் ,நைனா முகமது உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   ஏற்பாடுகளை அலுவலர் மன்றத்தில் செய்திருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top