Close
நவம்பர் 22, 2024 6:02 காலை

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக் கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல்

ஈரோடு

ஈரோட்டில் கனிமொழி எம்பியிடம் மன அளித்த விவசாய அணி இணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி,

பாண்டியாறு, கலைஞர் பல்கலைக்கழகம் திட்டம்-வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னூரிமை: எம்பி கனிமொழியிடம் கள்ளிப்பட்டி மணி வலியுறுத்தல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி­வு­ரைப்­படி , தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி எம்.பி. தலை­மை­யில் 11 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இக்­குழு பிப்.5 -ஆம்  தேதி முதல், தமிழ்­நாட்­டின் முக்­கிய நக­ரங்­க­ளுக்கு சென்று கோரிக்கைகளைப் பெற்று வருகிறது.

திருப்பூர், ஈரோடு, கரூர் தொகுதி தொகுதிக்குட்பட்ட கோரிக்கையினை குழு தலைவர் கனிமொழி பெற்றுக்கொண்டார்.

அப்போது, மாநில விவசாய அணி செயலாளர் ஏ கே எஸ் விஜயன் முன்னிலையில் விவசாய அணி இணை செயலாளர் கள்ளிப்பட்டி மணி, விவசாய அணி சார்பில் 200 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்க  வலியுறுத்தி மனு அளித்தார்.

அந்த மனுவில், ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்க ளில் 4.5 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாண்டியாறு -மோயாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதிகளில் அதிக அளவில் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகள் உள்ளன.

பவானிசாகரில் விவசாய சம்பந்தமான பல துறைகள் உள்ளன. வேளாண் பல்கலைக் கழகத்துடன் இணைத்து வேளாண் கல்லூரி அல்லது வேளாண் ஆராய்ச்சி மையத்தை தொடக்க வேண்டும்.

நாமக்கல், ஈரோடு மாவட்டக் கல்வி நிலையங்களை இணைத்து “கலைஞர் பல்கலைக்கழகம்” ஏற்படுத்த வேண்டும். வேளாண் கல்லூரியில் விவசாயி மகனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் பூக்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

ஏராளமான பூக்கள் உற்பத்தி செய்யப்படுவதால் தினமும் ஏராளமான பூக்கள் விற்பனையாகாமல் தேங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகி வருவதால் பூ வியாபாரிகளும், உற்பத்தி செய்யும் விவசாயிகளும் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ஆகவே சத்தியமங்கலத்தில் “வாசனை திரவிய தொழிற்சாலை”  அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை அமைப்பாளர் மணி, தென்றல் ரமேஷ், குமார் சீனிவாசன், சரவணன், ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top