நல்ல குணம் நல்லது.நல்ல குணம் வலிமையாலும், வலிமையின்மையினாலும் எழலாம்.வலுவற்ற நல்ல குணம் நல்லதாகாது.
உரிமையை விட்டுக் கொடுப்பது வலிமையாகாது. இயலாமையாகும்.உரிமையைப் பாராட்டுவது வலிமை மட்டுமன்று முறையாகும்.எல்லை கடந்து பழகுவது சரியில்லை.பிறர் எல்லை கடந்து பழகுவதை அனுமதிப்பது குற்றம்.
வலிமையற்றவன், குற்றத்தை அனுமதித்தால் நல்ல பெயர் வராது.குற்றத்தை அனுமதிப்பவன் குறையுடையவன்.வலிமை நிறைவுடையது. இயலாமையையும், குறையையும் வலிமை யாகவும் , நிறைவாகவும் மாற்றுவது மனித முன்னேற்றம். (பக். 287).
கர்ம போகியின் நூறு பேர்கள் குறையுடையவர்கள் நல்லவர்களாக மாறுவதற்கும், நல்லவர்கள் உன்னதமான வர்களாக உருவாவதற்கும் எளிமையான வழிகளைச் சொல்லும் நூல்.
வெளியீடு-மதர் சர்வீசஸ் சொசைட்டி ,பிளாட் 4, வெங்கட்ட நகர் விரிவு,பாண்டிச்சேரி, 605011. ரூ.150/-
# சா.விஸ்வநாதன்- வாசகர்பேரவை- புதுக்கோட்டை #