Close
நவம்பர் 21, 2024 11:36 காலை

நாமக்கல்லை சேர்ந்த புத்தக ஆசிரியருக்கு தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது..!

நாமக்கல்லை சேர்ந்த புத்தக ஆசிரியர் பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருதினை, அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

நாமக்கல் :
எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் எழுதிய நாமக்கல்லைச் சேர்ந்த பரணிராஜாவிற்கு, தமிழக அரசின் சார்பில் தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகரில், பார்க் ரோட்டில் வசித்து வருபவர் பரணிராஜா (80), இவர் தமிழ் மொழியில் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புத்தகங்களில், உறவுகள் என் உயிர் மூச்சு என்னும் எய்ட்ஸ் விழிப்புணர்வு புத்தகம் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இவரது புத்தகம் தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் இந்த புத்தகதிற்கு பாராட்டுரை வழங்கியுள்ளார்கள். இந்த புத்தகம் தற்போது 3&ம் பதிப்பாக வெளியிப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை, இந்த புத்தகத்தை சிறந்த விழிப்புணர்வு புத்தகமாக தேர்வு செய்துள்ளது. இதையொட்டி இந்த புத்தகத்தின் ஆசிரியர் பரணிராஜா தமிழ் செம்மல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்துகொண்டு, இந்த புத்தகத்தின் ஆசிரியர் பரணிராஜாவிற்கு, தமிழ் செம்மல் விருது வழங்கிப் பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top