Close
நவம்பர் 23, 2024 1:18 மணி

சோழவந்தான் பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை

மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சோழவந்தான், மேலக்கால், முள்ளிப்பள்ளம், திருவேடகம், தென்கரை பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. குறிப்பாக, விவசாயம் நிறைந்த இந்த பகுதியில் தற்போது பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், வெற்றிலைக் கொடிக்கால் மற்றும் வாழை பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர் .

குறிப்பாக, சோழவந்தான் பகுதியில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை மற்றும் வாழை பயிரிட்டுள்ளனர். இந்த கனமழை காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.
மதுரை மாவட்டம் அல்லாமல், சிவகங்கை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் சிவகங்கை காரைக்குடி மதகுபட்டி உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சாலை மற்றும் வயல் வெளிகளில் மழை நீர் குளங்களும் போலதேங்கின.
விக்கிரமங்கலத்தில், மழை காற்றுக்கு அறுந்து விழுந்த மின் வயரை மிதித்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மதியரசன் வயது 44. இவர் இன்று காலை இவரது தோட்டத்தை பார்க்க சென்ற பொழுது, நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு இவர் தோட்டத்து வழியாக சென்ற மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதை மதியரசன் பார்க்காமல் அறுந்து கிடந்த மின்சார வயரை மிதித்து விட்டார். இவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மதியரசன் இறந்து விட்டார்.
இது குறித்து, விக்கிரமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top