Close
செப்டம்பர் 19, 2024 7:21 மணி

சிவகங்கை அருகே பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அதிமுக

சொக்கநாதபுரத்தில் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மரியாதைக் குறைவாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து  அதிமுகவினர் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து மரியாதைக் குறைவாக பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட அதிமுக  செயலாளர், எம்எல்ஏ- செந்தில்நாதன்  அறிவுறுத்தலின்படி காளையார்கோவில் வடக்கு ஒன்றிய ம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் அருள் தலைமையில் சொக்கநாதபுரம் கடை வீதியில் ஒன்று கூடிய  நிர்வாகிகள் கண்டன முழக்கமிட்டு  அண்ணாமலையின் உருவ பொம்மையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக
காளையார்கோவில் ஒன்றியம் சொக்கநாதபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

அப்பகுதியில் இருந்த  காவல்துறையினர் தீ வைக்கப்பட்ட பாஜக தலைவர்  அண்ணாமலையின் உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இப்போராட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர்  சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சண்முகராஜன்  மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top