Close
நவம்பர் 21, 2024 11:05 மணி

விளாங்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : கணக்கில் வராத பணம் பறிமுதல்..!

விளாங்குடி சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை

விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்களை வைத்து பதிவு நடைபெறுவதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துணை கண்காணிப்பாளர் சதீஷ் சீலன் தலைமையிலான குழுவினர் விளாங்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

3 மணி நேரமாக நடைபெற்று வரும் சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார் பதிவாளர் மற்றும் கணினி உதவியாளர்,இடைத்தரகர்களிடம் விசாரணை செய்தனர்.லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சார்பதிவாளர் வீரக்குமரன் அறையிலிருந்து கணக்கில் வராத 1.90 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலர் வீரக்குமரன் மற்றும் 3 இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top