Close
நவம்பர் 14, 2024 4:54 காலை

அலங்காநல்லூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விவசாய அணி நடத்திய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காமராசு, தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் சிந்தனைவளவன், முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் எர்ரம்பட்டி பாலமுருகன், வரவேற்பு உரையாற்றினார்.

மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்

  • முல்லைப் பெரியாறு கால்வாயை சாத்தையார் அணையோடு இணைத்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
  • கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் எடுக்கப்பட்ட இடங்களை பிரித்து பயனாளிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
  • அலங்காநல்லூர் முனியாண்டி கோவில் பின்புறம் மற்றும் சால்வார்பட்டி, பொந்துகம்பட்டி, தண்டலை, வெள்ளையம்பட்டி, வலையபட்டி, வடுகபட்டி, பண்ணைகுடி, மேட்டூர், மரியம்மாள்குளம், ஆகிய பகுதிகளில் வசிக்கும் தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடனே வழங்க வேண்டும்.
  • ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி தலித் மக்களுக்கு வழங்கிட வேண்டும்
  • அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்குவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் பராமரிப்பு செலவுகள் ரூபாய் 10 கோடியும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி ரூபாய் 16 கோடியையும் வழங்க வேண்டும்
  • அலங்காநல்லூர் பகுதியில் மாணவ, மாணவியர், பயன்பெறும் வகையில் அரசு கல்லூரி அமைத்திடவும் மற்றும் தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

என ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர். இதில் சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வஅரசு, மாநிலத் துணைச் செயலாளர்கள் அழகுமலை, புளியம்மாள், வாடிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராதா, மாவட்ட நிர்வாகிகள் மணிமொழியான், சால்வார்பட்டி தமிழன், மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் பேச்சியம்மாள், மாவட்ட துணைச் செயலாளர்கள் கல்லணை தன்மானச்செல்வி, பாப்பாத்தி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சரோஜா, சீலக்காரி, களஞ்சியம், மற்றும் நிர்வாகிகள் கரிகாலன், தமிழழகன், பாலமுருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் அலங்கை பேரூர் ராமதாசு, தங்கராசு, நன்றி கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top