Close
நவம்பர் 21, 2024 10:45 காலை

200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்வது நிச்சயம்: எ.வ.வே. கம்பன் பேச்சு..!

கூட்டத்தில் பேசிய கம்பன்

திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, ஆரணி, சாலையில் உள்ள தனியார், திருமண மண்டபத்தில் சேத்துப்பட்டு, பேரூர் கழகம், மற்றும் சேத்துப்பட்டு, கிழக்கு, மேற்கு, ஒன்றியம். பெரணமல்லூர், மேற்கு ஒன்றியம் , சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கானஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாண்டுரங்கன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் எவரெஸ்ட் நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைவரையும் சேத்துப்பட்டு பேரூர் கழக திமுக செயலாளர் முருகன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவ அணி துணைத் தலைவரும், போளூர், கலசப்பாக்கம் சட்டமன்றதொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே. கம்பன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறுகையில்  வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவது 50 சதவீதம் வாக்கு சாவடி முகவர்கள் கையிலே உள்ளது. ஆகையால் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திராவிட முன்னேற்றகழகம் ஆட்சி அமைக்க பாடுபட வேண்டும்.

வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர்திருத்தம், இறந்த வாக்காளர்கள் பெயர் நீக்குவது ஆகிய பணிகளை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னின்று செய்யவேண்டும். புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து அதைநாம் கழகத்திற்கு ஓட்டாக மாற்றுவது, உங்கள் கையில் தான் உள்ளது. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திறன்பட செயல்பட்டு வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ந்து கலசப்பாக்கம் தொகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் கம்பன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கம்பன் பேசும்போது, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கலசப்பாக்கம் தொகுதியில் 35 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தந்தீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 200 இடங்களுக்கு மேல் திமுக கூட்டணி வெல்வது நிச்சயம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமை யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்காக முழுமையாக பாடுபடுங்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஐம்பதாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என ஆலோசனைகளை கூறி பேசினார்.

நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் , சேத்துப்பட்டு, கிழக்கு, மேற்கு, ஒன்றிய திமுக செயலாளர்கள் , பேரூர் கழக செயலாளர்கள், மற்றும் சேத்துப்பட்டு பேரூர் கழக நிர்வாகிகள்,  பூத் ஏஜென்ட்கள், பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top