Close
நவம்பர் 21, 2024 6:09 மணி

அங்கன்வாடி கட்டிடம் திறந்து மூன்று மாதம் தான் ஆச்சு, அதற்குள் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

பெயர்ந்து விழுந்த மேற்கூரை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு புதியதாக திறக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்குறை பெயர்ந்து விழுந்தது, இந்நிகழ்வின்போது அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் பள்ளி குழந்தைகள் யாரும் இல்லை இதனால் குழந்தைகள் காயம் இன்றி தப்பினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ளது முன்னூர் மங்கலம் என்ற கிராமம். அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் ரூ.15 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு 3 மாதங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டிடம் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.  இந்த புதிய கட்டிடத்தில் தான் குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. வழக்கமாக அங்கு குழந்தைகள் இருக்கும் சூழலில் இந்நிகழ்வின் போது அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் பள்ளிக்குழந்தைகள் யாரும் இல்லை.

இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் கூறுகையில், கட்டிடம் கட்டி, 3 மாதங்கள் கூட முழுமை பெறவில்லை. அதற்குள்ளாக புதிய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், கல்வித்துறையினர் உரிய விசாரணை நடத்தி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி கட்டிடத்தின் உறுதித்தன்மையை சோதனை செய்த பின்னரே குழந்தைகளை அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top