ஜி தொக்குக்காய் கராத்தே டூ இந்தியா சார்பாக தென்இந்திய அளவிலான ஓபன் கராத்தே போட்டி கோவை மாவட்டதில் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலகளில் இருந்து சுமார் 1000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மதுரை ஜி தொக்குக்காய் பள்ளி மாணவர்கள் மாவட்ட செயலாளர் கௌரி சங்கர் தலைமையில் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் 10 தங்கம்,6 வெள்ளி,12 வெண்கல பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம் :
6 வயது கட்டா பிரிவில் ஸ்ரீநிதி வெண்கலம்,
7 வயது கட்டா பிரிவில் சித்தார்த் வெள்ளி, யாழ்வேந்தன் வெண்கலம்,
8 வயது பிரிவில் அபினேஷ் வெள்ளி பதக்கம்,
9 வயது பிரிவில் யாத்ரா தங்கம், ஹரிச்சரன் வெள்ளி,பெண்கள் பிரிவில் பவானி தங்கம் வென்றனர்.
10 வயது பிரிவில் எப்ரன், ஸ்ரீஹரி பிரசன்னா தங்கம்,
பெண்கள் பிரிவில் லக்ஷிதா தங்கம்,
11 வயது பிரிவில் சுஜித்குமார் வெண்கலம், பெண்கள் பிரிவில் நந்தித்தா தங்கம்
12 வயது பிரிவில் கவினேஷ், ஸ்ரீஹரி வெண்கலம், பெண்கள் பிரிவில் ஜீவிதா தங்கம், ரோஜா வெண்கலம் வென்றனர்.
கருப்பு பட்டை பிரிவில் யோகேஷ் தங்கம், ஸ்ரீஷ்ரவன் வெள்ளி, கவின்நரசிம்மன் வெண்கலம் வென்றனர்.
சண்டை பிரிவில் சாதனா,லக்ஷிதா தங்கம், ஹரிஷ் குமார், யாத்ரா,எப்ரான் வெள்ளி,
விக்னேஷ்வரன், ஜீவிதா, யாழ்,பிரஜன் வெண்கலம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை ஜி தொக்குக்காய் அகில இந்திய தலைவர் கராத்தே தியாகராஜன், பொது செயலாளர் முத்துராஜு மற்றும் மாவட்ட செயலாளர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.