தமிழகத்தில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை சில குடும்பங்கள் திருப்பி அனுப்புவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணங்களாக அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியாகவே உள்ளது. அது குறித்த செய்தியை பார்க்கலாம் வாங்க.
மருத்துவமனையில் இருந்து அவர்களின் வாடகைத் தாய் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்ததைக் கேட்டவுடன், குழந்தையை தத்தெடுத்த பெற்றோர்கள் தத்தெடுத்த குழந்தைகளை மீண்டும் ஒப்படைப்பதாக தத்தெடுப்பு நிறுவனத்திற்கு அறிவிக்கின்றனர். .
இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு தத்தெடுக்கப்பட்ட 8 மற்றும் 10 வயதுடைய உடன்பிறப்புகளை திருப்பி அனுப்புவதற்கான முடிவைத் தெரிவித்தனர். இப்போது மீண்டும் அந்த குழந்தைகள் அரசு தத்தெடுப்பு இல்லத்தில் அனாதைகளாக வளரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அப்படி திருப்பி அனுப்பப்படுவதால் அந்த குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். மனதுக்குள் சொல்லமுடியாத வேதனைகளை அவர்கள் சுமந்து நிற்பார்கள்.ஏற்கனவே அனாதைகளாக்கப்பட்ட அந்த பிஞ்சுகள் தத்தெடுப்போரை பெற்றோர்களாக எண்ணி மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தயாராகும்போது அந்த மகிழ்ச்சியை பிடிங்கி எறிந்தால் அவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள்?
2020ம் ஆண்டு முதல், தமிழ்நாட்டில் சுமார் 12 பெற்றோர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக பல்வேறு அரசு சான்றளிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலம் சட்டப்பூர்வமாக தத்தெடுத்த குழந்தைகளை குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை திருப்பி அனுப்பியுள்ளனர் என்பது வேதனையான சம்பவங்கள்.
நான்கு பெற்றோர்கள் “குழந்தைகளை சரிசெய்வதில் சிக்கல்கள்” என்று கூறி திருப்பி அனுப்புவதற்கு ஒரு காரணமாக மேற்கோள் காட்டியுள்ளனர். பேசும்போது குழந்தைக்கு போதுமான அளவு கண் பார்வை இல்லை என்று ஒரு பெற்றோர் நினைக்கிறார். மற்றொருவர் குழந்தைக்கு கோபம் அதிகமாக வருகிறது என்கிறார்.
இப்படியெல்லாம் குழந்தைகளிடம் குறைகளைக்காணும் பெற்றோர் தாங்கள் பெற்ற குழந்தைகளிடம் இந்த குறைகள் இருந்தால் விரட்டிவிடுவார்களா என்ற கேள்வி எமக்கு ஏற்படுகிறது.
சில பெற்றோர் குடும்பத்தில் உள்ள திருமண அல்லது நிதி பிரச்சனைகளை மேற்கோள் காட்டினார்கள். மற்றவர்கள் குழந்தையின் மோசமான உடல்நிலையை மேற்கோள் காட்டினர். இன்னொரு முக்கிய பாதிப்பில் மூன்று குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து இருந்தனர்.
அவர்கள் மூன்று பேரும் தத்தெடுக்கப்பட்டனர். ஆனால் துரதிர்ஷடவசமாக் இப்போது ஒரு குழந்தை மட்டும் வளர்ப்பு பெற்றோரிடம் உள்ளது. மற்ற இரண்டு குழந்தைகள் இல்லங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சமூக நலத்துறை கணக்கின்படி 2020ம் ஆண்டில் மூன்று முறையும், 2021ம் ஆண்டில் நான்கு முறையும், 2023ல் ஐந்து முறையும் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு ரத்து செய்ததை பதிவு செய்துள்ளது. இருப்பினும், அவை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு நெறிமுறைகள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் மாவட்ட ஆட்சியரிடம் தத்தெடுப்பை கலைக்க விண்ணப்பம் செய்கிறது. அதற்கான செயல்முறை முடிந்ததும், குழந்தை மீண்டும் அரசு இல்லத்துக்குத் திரும்புகிறது.
அடுத்த தத்தெடுப்புக்கு “சட்டப்பூர்வமாக ” பட்டியலில் சேர்க்கப்படுகிறது. “நீண்ட காத்திருப்புப் பட்டியலைக் கருத்தில் கொண்டு இதை சாத்தியமாக்குகிறோம். பெரும்பாலான குழந்தைகளுக்கு விரைவில் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்” என்கிறார் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன்,
. “பொதுவாக, பெரும்பாலான தத்தெடுப்புகள் வெற்றிகரமாக உள்ளன. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் பல்வேறு காரணங்களால் கலைப்பு தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. என்கிறார்.
என்னவாக இருந்தாலும் தத்தெடுக்கும் பெற்றோரின் பின்புலம் தொடர்ந்து குழந்தைகளை அவர்களால் வளர்க்கமுடியுமா அவர்கள் மூலமாக குழந்தைகளுக்கு அன்பு கிடைக்குமா போன்றவைகளையும் தத்து கொடுக்கும் அரசு நிறுவனம் ஆய்வு செய்வதை பின்பற்றலாம்.
ஒரு குழந்தை பெற்றோரை இழந்து மனரீதியாக பாதிப்பை சந்தித்து இருக்கும். சமூகத்தில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படியான பாதிப்பில் இருக்கும் அந்த குழந்தையை தத்து எடுக்கும் பெற்றோரும் மீண்டும் இல்லத்திலேயே கொண்டுவந்து கொடுத்தால் அந்த குழந்தையின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கவேண்டும்.
இப்படி ஒரு குழந்தையை தத்து எடுத்துவிட்டு அந்த குழந்தைகள் மீது ஆயிரம் குறைகளைச் சொல்லி அந்த குழந்தையை கொண்டுபோய் மீண்டும் இல்லங்களில் விடுவதற்கு பதிலாக குழந்தைகளை தத்து எடுக்காமலேயே இருக்கலாம்.
ஒருவேளை அந்த குழந்தையை மீண்டும் ஒப்படைத்ததால், பின்னாளில் அதை எண்ணி நீங்களே வருத்தமடையலாம். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.