Close
நவம்பர் 18, 2024 8:33 காலை

நியாய விலை கடையை திறந்து வைத்த எம்எல்ஏ..!

பகுதிநேர நியாய விலை கடையை கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்.

கலசப்பாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாம்பாக்கம் கிராமத்தில் பகுதிநேர நியாய விலை கடையை கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடலாடி ஊராட்சி மாம்பாக்கத்தில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன்,  தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலசப்பாக்கம் தனி வட்டாட்சியர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் பங்கேற்று பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

கலசப்பாக்கத்தில் தாய்மார்களின் வீடு தேடிச் சென்று ஊட்டச்சத்து பெட்டகத்தை கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த  விண்ணுவாம் பட்டு, மற்றும் அண்ணா நகர் பகுதியில் பிறந்தது முதல் ஆறு மாதம் வரை ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகங்களை வீடு தேடிச்சென்று தாய்மார்களுக்கு சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.

மேற்கண்ட நிகழ்வுகளில்  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், வட்ட வழங்கல் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top