Close
ஏப்ரல் 4, 2025 12:15 காலை

அலங்காநல்லூரில் ஸ்ரீ சந்ததம் பால் சுவாமிகள் மடாலயம் சித்தர் ஆலய கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் 4வது வார்டில் அமைந்துள்ள ஸ்ரீசந்ததம்பால் சுவாமிகள் மடாலயம் சித்தர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாக வேள்வி ஆரம்பமாகி மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து இரண்டு கால யாகபூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வளம் வந்து பின் வானத்தில் கருடன் வட்டமிட கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கோவில் கருவறையில் அமைந்துள்ள சந்ததம்பால் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கொண்டல்சாமி நாயுடு மற்றும் சந்ததம் பால்சுவாமி சித்தர் வகையறாக்கள் செய்திருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top