Close
நவம்பர் 23, 2024 4:16 மணி

சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கிக்கு சிறந்த சேவைக்கான விருது..!

சிறந்த சேவைக்கான விருதினை சோழவந்தான் கூட்டுறவு வங்கி.செயலாளரிடம் அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

சோழவந்தானில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகிறது.

இவ்வங்கி வாடிக்கையாளர்களுக்கு விவசாயக் கடனுதவி, நகைக்கடன் மற்றும் தொழிற் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை திறம்பட செய்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் 71 வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

அந்த விழாவில் சோழவந்தான் கூட்டுறவு வங்கிக்கு சிறந்த வங்கிக்கான விருது அறிவிக்கப்பட்டது. அந்த விருதை அமைச்சர் மூர்த்தி வங்கியின் செயலாளர் வீரணனிடம் வழங்கிப் பாராட்டினார்.சோழவந்தான் கூட்டுறவு வங்கிக்கு சிறந்த சேவைக்கான விருது கிடைத்ததற்கு இப்பகுதி மக்களும் உறுப்பினர்களும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top