Close
நவம்பர் 24, 2024 8:26 காலை

பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்..!

ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:

சமூக நீதிக்காக பாடுபடுவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோர்க்கு  ரூபாய் 5 லட்சம் விருது தொகையும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்பட உள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை திறனை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்கள் விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பலாம்.

தங்களது விண்ணப்பம் சுய விபரம், முழு முகவரி, தொலைபேசி எண், மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விபரம் மற்றும் ஆவணங்களை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

2024 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி ஆகும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top