மதுரை.
மதுரை பாண்டி கோயில் ஜெ. ஜெ.நகர் வர சித்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, இத்திருக்கோயில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேக அர்ச்சணைகள் வழிபாடுகள் நடைபெற்றது. இதை அடுத்து, சுவாமி, அம்பாள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது.
கோவில் அர்ச்சகர் லால் சிவம், சிறப்பு பூஜைகளை செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, வர சக்தி விநாயகர் ஆலய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
இதே போல, மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயம் ,சித்தி விநாயகர் ஆலயம் , வர சித்தி விநாயகர் ஆலயம், யானைக் குழாய் முத்து
மாரியம்மன் ஆலயம் ,மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயம் ஆகிய கோவில்களில் சிவனுக்கு சங்காபிஷே பூஜைகள் நடைபெற்றது.