Close
நவம்பர் 26, 2024 2:16 மணி

வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் : பொதுமக்கள் பாதிப்பு..!

நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பணிகளை புணக்கனித்து, கலெக்டர் ஆபீஸ் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் :

கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, அக்., 25ம் தேதி பெருந்திரள் முறையீடு இயக்கம், 29ம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், 3ம் கட்டமாக, பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம், மாநிலம் முழுவதும் நவ.26ல்  துவங்கியது.

நாமக்கல் மாவட்டத்தில், வருவாய்த் துறை அலுவலர்கள், நேற்று பணி புறக்கணிப்பு செய்தனர். தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரகாஷ், மத்திய செயற்குழு உறுப்பினர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து, ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை ஆணையர் வெளியிட வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமினத்திற்கான உச்சவரம்பை, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.

பேரிடர் மேலாண் பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கான துணை கலெக்டர் பட்டியல் மற்றும் நடப்பாண்டிற்கான டி.ஆர்.ஓ., பட்டியலை வெளியிட வேண்டும்.

முழுப்புலம் பட்டா மாறுதல் செய்யும் அதிகாரத்தை தலைமையிடத்து துணை தாசில்தாரக்கு பிரித்து வழங்கியதை உடனடியாக கைவிட்டு, பழைய முறையே தொடர்ந்திட அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அலுவலர்கள் கோஷம் எழுப்பினர்.

இந்த பணிப்புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில், இளநிலை மற்றும் முதுநிலை ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார் அலுவலக உதவியாளர்கள், பதிவரை எழுத்தர் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு பேராட்டம் காரணமாக, மாவட்டம் முழுவதும், வருமானம், ஜாதி மற்றும் இருப்பிடச்சான்று, பட்டா வினியோகம், ரேஷன் கார்டு பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடங்கின. அதனால், பொதுமக்கள் ஆர்.ஐ., தாசில்தார் அலுவலகங்களுக்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top