தமிழக அரசு சாா்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு விண்ணப்பிக்க நவ. 28 (வியாழக்கிழமை) கடைசி நாள் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சாா்ந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலா் அரிய தொண்டாற்றி வருகின்றனா்.
இந்த அரிய தொண்டுகளை கருத்தில்கொண்டு, தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டா் அம்பேத்கா் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த விருதுக்காக வழங்கப்படும் தொகை ரூ.5.65 லட்சத்தில் இருந்து ரூ.5.80 லட்சமாக உயா்த்தி ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே, 2024-25-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருது பெற தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நவ.28-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் ஆதிதிராவிடா் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.