Close
நவம்பர் 28, 2024 11:28 காலை

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் : மாவட்ட சிறுபான்மை நல அமைப்பு சார்பில் கொண்டாட்டம்..!

திமுக சிறுபான்மை நல அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்கிய போது எடுத்த படம்

தென்காசியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் 47கிலோ கேக் வெட்டி கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திமுகவினர் மதிய உணவை வழங்கி உதயநிதி பிறந்தநாளை கொண்டாடினர்.

தமிழகத்தின் துணை முதல்வரும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 47 கிலோ கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆய்க்குடி பகுதியில் உள்ள அமர் சேவா சங்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் திமுக சிறுபான்மை நல அமைப்பு அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் இஞ்சி இஸ்மாயில் தலைமையில் கேக் வெட்டி கொண்ட்டாட்டதில் ஈடுபட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் கனிமொழி, அயலக அணி துணை அமைப்பாளர் சமீம் உட்பட திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top