Close
டிசம்பர் 4, 2024 7:07 மணி

புயல் நிவாரண பணிகளில் அரசியல் வேண்டாம்: ஈஸ்வரன் எம்எல்ஏ கோரிக்கை

ஈஸ்வரன் எம்எல்ஏ

புயல் நிவாரணப் பணிகளில் அரசியல் செய்ய
வேண்டாம் என :ஈஸ்வரன் எம்எல்ஏ கூறி உள்ளார்.

பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவரணப்பணிகள் தொடர்பாக அரசியல் செய்யாமல், அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் இ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் புயல் தாக்கத்தால், எதிர்பாராத மழையின் காரணமாக அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்திருக்கிறது. அங்கு அரசு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அரசியல் லாபங்களை கருதி தங்கள் சொந்த கருத்துகளை தெரிவிக்காமல், அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

அதேவேளையில் மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் அரசு துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். நிவாரண பணிகள் ஒருபுறம் நடந்தாலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டுமென்ற தரவுகளை இந்த நேரத்தில் சேகரிக்க வேண்டும்.
அதன்படி திட்டமிட்டு பணிகள் செய்யப்பட்டால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட பாதிப்புகளை தவிர்க்கலாம். இதை கவனத்தில் கொண்டு அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு உயர் அதிகாரிகளை நியமித்து தரவுகளை திரட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top