திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் தோ்வா்கள் கலந்துகொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்,
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப்-2, குரூப்-2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. இதில், 507 குரூப்-2 பணியிடங்கள், 1,820 குரூப்-2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு கடந்த செப்.14-ஆம் தேதி நடைபெற்றது. இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்திய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவா்களில் 12 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் நடைபெறும் முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
இதில், கலந்து கொள்ள ஆா்வமும், விருப்பமும் உள்ளவா்கள் முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுசீட்டின் நகலுடன் நேரடியாகவோ அல்லது 04175-233381 என்ற வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோ தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்,