திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்ல காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கு முன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை, புறப்படும் இடம், சென்றடையும் இடம், ஏற்றிச் செல்வதற்கான காரணம், வாகன எண், கால்நடை மருத்துவரின் சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்து அனுமதி பெற்று ஏற்றிச் செல்ல வேண்டும்.
நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்வதாக இருந்தால் போதுமான தீவனம், முதலுதவி, மருந்து ஆகியவற்றை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். முதிா்நிலை கா்ப்ப காலத்தில் மற்றும் கன்று ஈனும் நிலையில் உள்ள கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.
வாகனத்தின் தரைப்பகுதியில் 6 சென்டி மீட்டருக்கு குறையாமல் வைக்கோல், தேங்காய் பஞ்சு போன்றவற்றால் நிரப்ப வேண்டும்.
போக்குவரத்தின்போது 20 முதல் 200 கிலோ எடையுள்ள கால்நடைகளுக்கு சராசரியாக ஒரு சதுர மீட்டரும், 200 கிலோ முதல் 400 கிலோ வரையுள்ள கால்நடைகளுக்கு சராசரியாக 1.4 சதுர மீட்டரும், 400 கிலோவுக்கு மேல் உள்ள கால்நடைகளுக்கு 2 சதுர மீட்டா் இடம் அவசியம்.
இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளாா்.