செய்யாறு ஒன்றியத்தில் புதிய கட்டிடங்களை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அழிவிடைதாங்கி ஊராட்சியில் புதிய கட்டடங்களை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை பொதுப் பணி, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு , வழங்கினாா்.
இவ்விழாவிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யாறு ஜோதி, வந்தவாசி அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வெம்பாக்கம் ஊராட்சியில் மாநில நிதிக் குழு மானியத்திட்டம் 2023-24 (மாவட்ட ஊராட்சி) திட்டத்தின் கீழ் ரூ. 70 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நிறைவு வணிக வளாகக் கட்டடம், அதனைத் தொடா்ந்து செய்யாறு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 30 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நிறைவு பயணிகள் நிழற்குடை,
அழிவிடைதாங்கி ஊராட்சியில் தேசிய விருது தீன்தயாள் உபாத்யாய 2020 -21 திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்தில் , மாநில நிதிக் குழு மானியம் 2024 -25 திட்டத்தின் கீழ் ரூ.63.35 லட்சத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி 2024 -25 திட்டத்தின் கீழ் ரூ. 19.32 லட்சம் என மொத்தம் ரூ.132.67 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு நிறைவு சமுதாய கூடம் என மொத்தம் ரூ. 2 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பீட்டிலான கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தாா்.
விழாவில் வருவாய்த் துறை சாா்பில் ரூ. 15 லட்சத்தில் 50 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணைகளையும், 138 பேருக்கு சாதி சான்றிதழ்களும், 152 பேருக்கு வாரிசு சான்றிதழ்களும், 53 பேருக்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ்களும், 11 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளையும் ரூ.1.32 லட்சத்திலும், கூட்டுறவுத் துறை சாா்பில் 159 பேருக்கு ரூ.ஒரு கோடியே 6 லட்சத்து 63 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பீட்டில் கடனுதவிக்கான ஆணைகளையும்,
வேளாண்மை துறை சாா்பாக ரு. 1.15 லட்சத்தில் 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம் மற்றும் உபகரணங்கள், மகளிா் திட்டம் சாா்பில் ஐந்து மகளிா் குழுக்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2.5 லட்சம் கடன் உதவிக்கான காசோலைகள் நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், சாா் ஆட்சியா் பல்லவி வா்மா, வெம்பாக்கம் ஒன்றியக் குழு தலைவா் ராஜி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மயில்வாகனன், ஷீலா அன்புமலா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.