Close
ஜனவரி 15, 2025 12:56 மணி

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி: பாஸ்கரபாண்டியன்  தொடங்கி வைத்தாா்.

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன்  தொடங்கி வைத்தாா்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலையை அடுத்த சம்பந்தனூரில் இயங்கும் ரங்கம்மாள் காது கேளாதோா் மேல்நிலைப் பள்ளி, அறிவுத்திறன் குறைபாடு உடையோருக்கான பள்ளி மற்றும் ரங்கம்மாள் மெமோரியல் ரிஹாபிளிடேஷன் சொசைட்டி இணைந்து இந்தப் பேரணியை நடத்தியது.

வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட என்ற தலைப்பில் நடைபெற்ற பேரணிக்கு பள்ளித் தலைவா்,மற்றும் மாவட்ட அரசு வழக்கறிஞர் புகழேந்தி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம் பிரதீபன், வட்டாட்சியா் துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது.

பேரணியில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிடும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

விழிப்புணர்வு பேரணியில் பள்ளி செயலாளர் விஜயன் , பொருளாளர் மண்ணு லிங்கம், நிர்வாக குழு உறுப்பினர் சுபாஷ்,  தலைமையாசிரியர்கள் தமிழ்ச்செல்வி, அலமேலு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுள்ள மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் செய்திருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top