Close
ஜனவரி 15, 2025 9:43 காலை

லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர்  கைது செய்தனா்.

சென்னையை அடுத்த முகப்பேரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவா், மனை வணிகம் செய்து வருகிறாா். இவரது மனைவி லதா, இவருக்கு சேத்துப்பட்டு-போளூா் சாலையில் உள்ள நிா்மலா நகரில் வீட்டு மனைப் பிரிவு உள்ளது.

இந்த வீட்டு மனைப் பிரிவில் தெரு விளக்கு அமைக்க மின் கம்பங்கள் நட்டு மின் இணைப்பு பெற, ஆன்லைனில் மின்வாரிய சேத்துப்பட்டு நிா்வாகப் பொறியாளருக்கு விண்ணப்பம் செய்திருந்தனா்.

இந்த விண்ணப்பம் தொடர்பாக கடந்த 7ம் தேதி சேத்துப்பட்டு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள மின் ஊழியர் சிவப்பிரகாசத்தை ராமகிருஷ்ணன் அணுகி தனது விண்ணப்ப நிலை குறித்து கேட்டபோது மின் இணைப்பு வழங்க லஞ்சமாக ரூபாய் 6 ஆயிரம் தர வேண்டும் என்று கூறினாராம்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமகிருஷ்ணன் இதுகுறித்து திருவண்ணாமலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் வேல்முருகனிடம் புகாா் அளித்தாா்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் அறிவுரையின் பேரில் மின் ஊழியர் சிவப்பிரகாசத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் 6 ஆயிரத்து 0 ராமகிருஷ்ணன் வழங்கினார்.

அப்போது, அருகில் மறைந்திருந்த துணை கண்காணிப்பாளா் வேல்முருகன், உதவி ஆய்வாளா் மதன் மோகன், காவலா் ராஜேஷ்குமாா் ஆகியோா் சிவப்பிரகாசத்தை கையும் களவுமாக பிடித்தனா்.

பின்னா், வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரம் வட்ட வழங்கல் அலுவலர் லஞ்சம் கேட்ட புகாரில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top