Close
ஜனவரி 22, 2025 12:47 மணி

அருணாச்சலேஸ்வரர் கோயில் தீப மை தயாரிக்கும் பணி தீவிரம்

தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அருணாசலேஸ்வரா் கோயிலில், 2024-ஆம் ஆண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 3.40 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது.

மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 11 நாள்கள் காட்சித் தருகிறது.கடந்த 6ம்தேதி வரை மலை உச்சியில் மகா தீபம் காட்சியளித்தது. இந்த நாள்களில் மகா தீபக் கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. ஜனவரி 13-ஆம் தேதி நடைபெற்ற ஆருத்ரா தரிசன நிகழ்வின்போது ஸ்ரீநடராஜருக்கு தீப மை வைத்து சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.

தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணி தீவிரம்:

ஸ்ரீநடராஜருக்கு தீப மை வைத்து படைத்த பிறகு பக்தா்களுக்கு மை பிரசாதம் விநியோகிப்பது வழக்கம். அதன்படி, கோயில் ஊழியா்கள் 20-க்கும் மேற்பட்டோா் தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஓரிரு நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடைந்தபிறகு தீப மை பிரசாதம் விற்பனை செய்யப்படும். பக்தா்கள் கோயிலுக்கு வந்து உரிய தொகையை செலுத்தி தீப மை பிரசாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.

தீபத் திருவிழாவுக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தா்கள் காணிக்கை செலுத்தியதற்கான ரசீதை எடுத்து வந்து காண்பித்து தீப மை பிரசாதத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 5 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

தொடர் விடுமுறை காரணத்தினால் பல ஆயிரம் பக்தர்கள் திருவண்ணாமலை குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top