Close
ஜனவரி 23, 2025 2:38 மணி

குடியரசு தின விழா முன்னேற்பாட்டு பணிகள் : ஆட்சியர் ஆய்வு..!

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடத்தப்படும் குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.  மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திடவும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஆவின் நிறுவனம் மூலமாக குளிர்பானங்கள் விழா நடைபெறும் இடத்தில் வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவக் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மேடை அமைத்தல், நுழைவு வாயில் பகுதியில் அலங்காரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து செய்ய வேண்டும். வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் பந்தல் அமைக்க வேண்டும்.

மேலும் விழா நடைபெறும் இடத்தில் தேவையான எண்ணிக்கையில் நாற்காலிகள் வசதிகளை முறையாக ஏற்படுத்திட வேண்டும். இந்தப் பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top