திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகே தொடங்கிய பேரணிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். டிஎஸ்பி சண்முகவேலன் முன்னிலை வகித்தார்.
விழிப்புணர்வு பேரணியை செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பேரணி ஆனது ஆரணி கூட்டு சாலை ஆற்காடு சாலை காந்தி சாலை வழியாக சென்று பெரியார் சிலையில் நிறைவடைந்தது.
அங்கு தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு தலை கவசத்தை இலவசமாக வழங்கிய சார் ஆட்சியர் பல்லவி வர்மா, விழிப்புணர்வு தூண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ,அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் கருணாநிதி தலைமை வகித்தாா்.
வந்தவாசி வடக்கு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். இதையொட்டி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், பஜாா் வீதி, தேரடி, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைப் பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டவேண்டும், சீட் பெல்ட் அணிந்து கொண்டு காரை இயக்கவேண்டும், மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்று கூறி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.