Close
ஜனவரி 30, 2025 7:09 மணி

பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம்

தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டார வள மையத்தில் பேச்சு பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வள மைய மேற்பார்வையாளர் ராஜா தலைமை தாங்கினார். ஆசிரிய பயிற்றுநர் செண்பகவல்லி வரவேற்றார். இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு பயிற்சி முகாமை துவக்கி வைத்து பேசுகையில்,

ஆசிரியர்கள் சமுதாயத்தின் கண்ணாடி போன்றவர்கள். இவர்கள் பள்ளிக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக பாட இடைவெளியின் போது பள்ளியின் அருகில் உள்ள கடைகளுக்கு சென்று வரும் பெண் குழந்தைகளுக்கு உரிய அறிவுரைகளை நாம் வழங்க வேண்டும்.

முக்கியமாக குட் டச், பேட் டச் குறித்து அவர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். வெளியிடங்களில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பள்ளி குழந்தைகள் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.

தொடர்ந்து முகாமில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உதயசூரியன், ஆசிரிய பயிற்றுநர் அப்பாஸ், சமூக நலத்துறை கருத்தாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகள் மீதான துன்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து வட்டார அளவில் பங்கு பெற்ற 38 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பெண்களுக்கு சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாம்  நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சட்ட பாதுகாப்பு விழிப்புணா்வு பயிற்சி முகாமில் வட்டார மேலாளா் பிரியதா்ஷனி தலைமை வகித்தாா்.  மாவட்ட வள பயிற்றுநா் ரவி பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு, அடக்குமுறை, பள்ளி மாணவிகள், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலின குற்றங்களுக்கு சட்டரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறை தண்டனைச் சட்டம் குறித்து பயிற்சி அளித்தாா்.

இதில், போளூா் ஒன்றியத்தைச் சோ்ந்த சமுதாய வள பயிற்றுநா்கள், வட்டார வள பயிற்றுநா்கள், கட்டமைப்பு செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top