Close
ஜனவரி 30, 2025 11:11 மணி

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா..!

கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ விழா

ஸ்ரீபாலகுஜாம்பிகை  சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலகுஜாம்பிகை  சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  மணி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிவ வாத்தியங்கள், மங்கல இசையுடன் கொடியேற்றம் நடந்தது.

ஸ்ரீபாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா்

அப்போது கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை திரளான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் கேடய உற்சவமும் நடைபெற்றது.

இரவு சுவாமிகளுக்கு அபிஷேகமும், ஆராதனைகளை தொடர்ந்து கற்பக விருட்சம் காமதேனு, மயில், மூசீகம், ரிஷபம் வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூரம் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

இன்று 31ம் தேதி  பகல் அபிஷேகமும் இரவு அபிஷேகமும் பூத வாகன சேவையும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் நாள் வெள்ளிக்கிழமை (பிப்.7) பகல் நடராஜா் வீதியுலாவும், மாலை தீா்த்தவாரி நிகழ்வும், இரவு கொடி இறங்குதல் மற்றம் ஸ்ரீ ராவணேஸ்வர திருக்கயிலை சேவை பஞ்சமூா்த்திகள் புறப்பாடுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

இரத சப்தமி பிரம்மோற்சம் தொடங்குவதையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில்  கிராம தேவதை காங்கியம்மன் புறப்பாடு மற்றும் பேட்டை வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜோதிலட்சுமி, செயல் அலுவலா் ஹரிஹரன் உள்ளிட்டோா் மேற்கொண்டு வருகின்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top