Close
ஜனவரி 31, 2025 10:11 காலை

பெண் குழந்தைகளை படிக்க வைப்பது முக்கியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்

சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

பெண் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் அறிவுறுத்தி பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் குத்தனூர் கிராமத்தில் மனுநீதி நாள் திட்ட விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி 73 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது;

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், குழந்தைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் மாவட்டத்தில் 170-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கும், அந்தக் கட்டடங்களில் குடிநீா் இணைப்புகள், குழந்தைகளுக்கு ஏற்ற முறையில் பாதுகாப்பான கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் வீடு தோறும் மருத்துவர்கள் சென்று மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் இதயம் காப்போம் சிறுநீரகம் காப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

மாவட்ட தொழில் மையம் சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ், வங்கிகளில் கடனுதவிகள் பெற்று பொதுமக்கள் தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காக்கும் கரங்கள் திட்டத்தின் வாயிலாக முன்னாள் ராணுவ வீரா்களுக்கு தொழில் தொடங்க ரூ. ஒரு கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெண்கள் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்த பட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். பெண்கள் கல்வி கற்கின்ற போது தான் வீட்டையும் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள். அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துணிப்பையை நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

நிகழ்ச்சியில், வருவாய்த் துறை சாா்பில் 73 பேருக்கு ரூ. ஒரு கோடியே 9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் இலவச மனைப் பட்டாவுக்கான ஆணை, 5 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான உத்தரவு, முதியவருக்கு உதவித்தொகையும், 4 பேருக்கு ரூ.42 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய குடும்ப அட்டைகளும், வேளாண் துறை சாா்பில் 9 விவசாயிகளுக்கு ரூ. 29,275 மதிப்பில் இடுபொருள்கள், வேளாண் கருவிகள் என 92 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 675 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். முன்னதாக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆய்வு மேற்கொண்டார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன்,செய்யாது சார் ஆட்சியர் பல்லவி வர்மா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் சிவா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top