Close
ஜனவரி 31, 2025 5:41 மணி

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி 4வழி சாலை அமைப்பு பணி : அமைச்சர் துவக்கம்..!

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கம் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அருகில் அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் உமா, எம்எல்ஏ ஈஸ்வரன், எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர்.

நாமக்கல் :

ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி நான்கு வழி சாலை அமைக்கம் திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, கரட்டுப்பாளையத்தில், ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி இரண்டு வழி நெடுஞ்சாøயை, நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தர்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்துப் பேசியதாவது;

பொருளாதார வளர்ச்சிக்கு சாலைகளின் முக்கியத்துவம் கருதி, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டத்தை, தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் தாலுகா தலைமையகங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகள் 2,200 கி.மீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2024-25 ஆம் நிதியாண்டில் 254.32கி.மீ சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துல் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3ஆண்டுகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் 227 பணிகள் ரூ. 412 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிதியாண்டில் 57 பணிகளுக்கு ரூ. 154 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர மண்சாலை அமைக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக முதல்வர் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்படும் என அறிவித்தார்கள்.

இந்த அறிவிப்பின்படி சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொல்லிமலையில் விபத்துகளை குறைக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் முறையில் சிறப்பு தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் புதிய பைபாஸ் ரோடு அமைக்கும் பணி ரூ.207 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. அதே போன்று திருச்செங்கோடு பைபாஸ் அமைக்கும் பணி ரூ.124 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள 1,281 தரைமட்ட பாலங்களை தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10 தரைமட்ட பாலங்கள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என கூறினார்.

முன்னதாக, திருச்செங்கோடு நகரில் பைபாஸ் ரோடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், திருச்செங்கோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கி அமைச்சர் எ.வ.வேலு துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில், திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணைத் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top