Close
ஜனவரி 31, 2025 10:55 மணி

நீலகிரியில் டூரிஸ்ட் வருகையை கட்டுப்படுத்துவோம்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை உயர்நீதிமன்றம்

நீலகிரியில் சுற்றுலா பயணிகளை மலைப்பகுதிக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான இ-பாஸ் உத்தரவை முறையாக அமல்படுத்தவில்லை என்றால், டூரிஸ்ட்கள் நுழைவைக் கட்டுப்படுத்த உத்தரவிடப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிப்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் நீதிபதி டி பாரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. விசாரணையின் போது, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பை கொட்டுவதை கட்டுப்படுத்த 93 தானியங்கி தண்ணீர் விற்பனை இயந்திரங்கள் உள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை சமர்பித்தார்.
ஆனால், விற்பனை இயந்திரங்கள் செயல்படும் நிலையில் இல்லை என்று குறிப்பிட்டு அறிக்கை மீது அமர்வுஅதிருப்தி தெரிவித்தது.
மேலும், நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கான இ-பாஸ் உத்தரவும் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும. இதேநிலை நீடித்தால், மாவட்டத்திற்குள் நுழையும் சுற்றுலா வாகனங்களை கட்டுப்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் எந்த தவறான தகவலும் இல்லாமல் புதிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆட்சியருக்கு அமர்வு உத்தரவிட்டது மற்றும் அடுத்த நடவடிக்கைக்காக வழக்கை பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும், திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top