Close
ஏப்ரல் 19, 2025 7:10 காலை

ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ. 58.26 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கையாக ரூ. 58.26 லட்சம் பெறப்பட்டது.
நாமக்கல் கோட்டையில் அருள்மிகு நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மசாமி கோயில் மற்றும் ஆஞ்சநேயர் சாமி திருக்கோயில்கள் உள்ளன. மெயின் ரோட்டில் அரங்கநாதர் சாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, ஆஞ்சநேயர் கோயிலில் 6 உண்டியல்கள், நரசிம்ம சாமி கோயிலில் 4 உண்டியல்கள், ரங்கநாதர் கோயிலில் 2 உண்டியல்கள் என மொத்தம் 3 கோயில்களிலும் 12 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

சுமார் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்படும். கடைசியாக கடந்த 18.10.24 அன்று உண்டியல்கள் திறக்கப்பட்டன.
மீண்டும் கடந்த 13ம் தேதி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உதவி கமிஷனர் ரமணிகாந்தன், கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செல்வசீராளன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணி கணக்கிடப்பட்டது.

உண்டியல்கள் மூலம் மொத்தம் ரொக்கம் ரூ. 58 லட்சத்து 26 ஆயிரத்து 592, தங்கம் 43 கிராம் மற்றும் வெள்ளி 222 கிராம் பெறப்பட்டுள்ளது. உண்டியல் திறப்புக்கு திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் பக்தர்கள் சேவையில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top