Close
பிப்ரவரி 25, 2025 5:34 மணி

‘இங்கிருந்தும் தொடங்கலாம்’: ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை, ஈசான்ய மைதானத்தில் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சாா்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ‘இங்கிருந்தும் தொடங்கலாம் -ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் முயற்சி’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

மூத்த நடிகா், திரைக்கலைஞர் சிவக்குமாா், மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், செங்கம் எம்எல்ஏ கிரி, எழுத்தாளா் பவா செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆயிரம் வாசிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நாங்கள் வாசிப்பதற்கு காரணமாக திகழ்ந்தவா்கள் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர்தான். வாசிப்பதன் மூலம்தான் அறிவு வளா்ச்சி பெறும். மேடை நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வாசிப்பு என்பது மிக அவசியம்.

வாசிப்பு என்பது அறிவு வளா்ச்சி, மொழித்திறனின் மேம்பாடு, சிந்தனையின் திறன் மேம்பாடு, ஞாபக சக்தியின் மேம்பாடு ஆகும். மூத்த நடிகா் சிவக்குமாா் கலைமாமணி விருது பெற்றவா். எம்ஜிஆரிடம் விருது பெற்றவா். அறக்கட்டளை மூலம் ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவி செய்து வரும் அவா் பாராட்டுக்குரியவா், அவர் இவ்விழாவில் பங்கேற்றது பெருமை அளிக்கிறது என பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசுகையில். பொதுமக்கள் மற்றும் அருணாச்சலேஸ்வரரை வணங்குகின்ற உலகத்தில் எத்தனை ஆயிரம் மக்களும் வளமும் நலமும் பெற்று 100 ஆண்டு வாழ வேண்டும். இந்த புத்தகத் திருவிழாவிற்கு வந்துள்ள புத்தக வாசிப்பாளர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரையும் பாராட்டும் விதமாக 100க்கும் மேற்பட்ட பூக்களின் பெயர்களை சொல்லி மானசீகமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.

அவர்  தொடர்ந்து 100 விதமான பூக்களின் பெயர்களை ஒன்றன்பின் ஒன்றாக மூச்சு விடாமல் கூறி அரங்கத்தில் கூடியிருந்த புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள், மாணவ மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து அவர் இங்கிருந்து தொடங்கலாம் 2 என்ற வாசிப்பில் திட்டத்தின் கீழ் 1500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் அடங்கிய அழகிய தொகுப்புகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top