Close
மார்ச் 16, 2025 10:07 மணி

விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்த்திட பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்யலாம்

திருவண்ணாமலைமாவட்ட விவசாயிகள் தங்கள் நில உடமைகளை சரிபார்த்திட பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.  இவற்றை பெற விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.

விவசாய அடையாள எண் மூலம் வேளாண் பயிர்க்கடன், விவசாய இடுபொருட்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவி திட்டங்கள் இதர துறைகளின் உழவர் நல திட்டங்கள் ஆகியவற்றைப் பெற முடியும். இனிவரும் காலங்களில் அரசு திட்டங்களில் பங்கு பெற்று பயன்பெற விவசாயி அடையாள எண் முக்கியமானதாகும்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு தனி விவசாய அடையாள எண் ஏற்படுத்துவதற்கான முகாம் அந்தந்த கிராமங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சமூகவள நபர்கள் மற்றும் இல்லம் நேடிக் கல்வி தன்னார்வலர்கள் மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது அனைத்து பொது சேவை மையங்களிலும் (CSC) இலவசமாக பதிவேற்றம் செய்து கொடுப்பதால், விவசாயிகள் பொது சேவை மையங்களை அணுகி தங்களின் விஷயங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,54,907 விவசாயிகள் இருக்கும் நிலையில், இதுவரை 1,28,401 விவசாயிகள் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் 31-03-2025க்குள் கீழ்கண்ட ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய தேவையான ஆண்கள் ஆதார் அட்டை, நிலபட்டா மற்றும் ஆதர் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி ஆகியவற்றை பதிவு செய்ய கொண்டு செல்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top