Close
மே 6, 2025 9:36 மணி

செண்பகதோப்பு அணை, மிருகண்டா நதி அணைகளில் தண்ணீர் திறப்பு

அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செண்பகத் தோப்பு அணை, கலசப்பாக்கம் அருகேயுள்ள மிருகண்டா நதி அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

மிருகண்டா நதி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் உள்ள மிருகண்டா நதி அணையிலிருந்து 120 கன அடி விதம் நீரை விவசாய பாசனத்திற்கு 6 நாட்களுக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், திறந்து வைத்தார் .

மிருகண்டா நதி அணையின் நீா்மட்டம் 22.97அடி ஆகும். அணையின் முழுக்கொள்ளளவு 87.23 மி.கன அடியாகும். தற்போது, அணையின் நீா்மட்டம் 20.17அடியாக உள்ளது. 71.631 மி.கன அடி நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, விநாடிக்கு 120 மி.கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. மே 9 வரை 6 நாள்களுக்கு தொடா்ச்சியாக தண்ணீா் செல்லும். இதன் மூலம் 3,190.96 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும்.

இந்த நிலையில், 2 அணைகளில் இருந்து விவசாய பாசனத்துக்காக நீரை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ்  திறந்துவைத்தாா்.

தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், இப்பொழுது முதல் வரும் 9ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீரை வழங்குவதற்கு விவசாயிகளின் கோரிக்கையின்படி மிருகண்ட நதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் பாசன நீரை சிக்கனமாகவும் துறை பணியாளர்களின் அறிவுரை படியும் சிறந்த முறையில் பயன்படுத்தி நல்ல விளைச்சல் பெற்றிட எல்லா வகையிலும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அறிவிக்கப்பட்ட தேதிக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கும் தேதியை நீடிக்கப்பட மாட்டாது.  இதன் மூலம் விவசாயிகளின் நீர் பாசனத்தை சரியான முறையில் பயன்படுத்தி விவசாயத்தை சிறப்பான முறையில் பயிர் செய்ய வேண்டும் என்று கூறினார்.

மிருகண்டாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள (1) காந்தபாளையம் அணைக்கட்டு, (2) நல்லான்பிள்ளைபெற்றாள் அணைக்கட்டு, (3) கங்காலமாதேவி அணைக்கட்டு, (4) கேட்டவரம்பாளையம் அணைக்கட்டு, (5) கங்காலமாதேவி அணைக்கட்டு, (6) சிறுவள்ளூர் அணைக்கட்டு, (7) பிள்ளையார் கோவில் அணைக்கட்டு, (8) சிறுவள்ளூர் காலனி அணைக்கட்டு, (9) வில்வாரணி அணைக்கட்டு, (10) அம்மாபுரம் அணைக்கட்டு, (11) எலத்தூர் அணைக்கட்டின் கீழ் பயன்பெறும் நேரடி பாசனம் மற்றும் 17 ஏரிகளின் வாயிலாக மொத்தம் 2847.49 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசனவசதி பெறும்  .

செண்பகத் தோப்பு அணை

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்டபோளூர் ஒன்றியம் படவேடு பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணை நீர்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், திறந்து வைத்தார் .

செண்பகதோப்பு அணையின் முழு நீா்மட்டம் 62.32 அடி, முழுக்கொள்ளளவு 287.20 மி.க. அடி அடியாகும். அணையில் 54.28 அடி தண்ணீா் உள்ளது. தற்போது, கொள்ளளவு 208.036 மி.க. அடியாக உள்ளது. பாசன நீா் இருப்பு 194.40 மி.க. அடியாகும். இதில் இருந்து விநாடிக்கு 150 மி. கன அடி நீா் பாசனத்துக்காக திறக்கப்பட்டது. இதன் மூலம் 48 ஏரிகள் நிரம்பி, 8350.40 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். மே 18 வரை என 15 நாள்களுக்கு தொடா்ச்சியாக தண்ணீா் செல்லும்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அண்ணாதுரை எம்.பி., கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், செயற்பொறியாளா் அறிவழகன், உதவி செயற்பொறியாளா் கோவிந்தராசு, உதவிப் பொறியாளா் ராஜகணபதி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top