Close
மே 22, 2025 8:27 மணி

மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

நெடுஞ்சாலை துறை சார்பாக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

மதுரையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் அமைந்துள்ள அழகர் கோவில் பகுதி முக்கிய இடமாக விளங்குகிறது. இப்பகுதியில் உள்ள மேலூர் – அழகர் கோவில் நெடுஞ்சாலை பிரதான சாலையாக திகழ்கிறது. திருக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் இந்த சாலையை முக்கிய சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

தன்படி இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்த்திடும் நோக்கில் இரு வழிச்சாலையாக உள்ள 3.14 கி.மீ நீளம் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்திட திட்டமிடப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பாக, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டு முன்னேற்றத்தில் உள்ளன.

இச்சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். பணிகளை, விரைவாகவும், தரமாகவும் நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது, அரசு செயலாளர் (நெடுஞ்சாலைகள் துறை) செல்வராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, சேடப்பட்டி மணிமாறன், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் , கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர்கள் மோகன காந்தி, பிரசன்னா வெங்கடேஷ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top