Close
ஜூன் 18, 2025 12:28 காலை

சென்னை திருவண்ணாமலை ரயில் புதன்கிழமை ரத்து

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் ரயில் உட்பட நான்கு ரயில்கள் புதன்கிழமை 18ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை மண்டலப் பிரிவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:

காட்பாடியிலிருந்து இரவு 9.10 மணிக்குப் புறப்படும் காட்பாடி – திருப்பதி மெமு பாசஞ்சர் (67210)

திருப்பதியிலிருந்து இரவு 7.10 மணிக்குப் புறப்படும் திருப்பதி – காட்பாடி மெமு பாசஞ்சர் (67209)

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை – திருவண்ணாமலை மெமு பாசஞ்சர் (66033) ஆகிய ரயில்கள்  புதன்கிழமை (ஜுன் 18)  ரத்து செய்யப்படுகின்றன.

திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை – தாம்பரம் மெமு பாசஞ்சர் (66034) செவ்வாய்க்கிழமை(ஜூன் 17), வியாழக்கிழமை(ஜூன் 19) ஆகிய 2 நாள்கள் ரத்து செய்யப்படுகின்றது.

கும்மிடிப்பூண்டி மார்க்கம்: கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி இடையே ரெயில்வே பொறியியல் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை – மின்சார ரெயில் உள்பட 19 ரெயில்களின் சேவையில்  19 ஆம் தேதி  மாற்றம் செய்யப்பட உள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top