Close
செப்டம்பர் 20, 2024 6:26 காலை

புதுக்கோட்டைபேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு  மதியஉணவு  வழங்கல்

புதுக்கோட்டை

வள்ளலார் மாணவர் இல்லத்தில் உணவு வழங்கிய புதுக்கோட்டை பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத்தினர்

புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு  மதியஉணவு  வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம்  மாவட்ட  ஆசிரிய பயிற்சி நிறுவன(DIET) முதுநிலை விரிவுரையாளர் எம் .மாரியப்பன் சார்பில் புதுக்கோட்டை ஏ.மாத்தூர்  வள்ளலார் இல்ல மாணவர்களுக்கு பேலஸ் சிட்டிரோட்டரி சங்க தலைவர் துரைமணி மதியஉணவு  வழங்கி மாணவர்களுக்கு கல்வியில் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில்   சங்கத்தின்  செயலாளர் பாஸ்கரன் மற்றும் திட்ட இயக்குனர் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்   பேலஸ் சிட்டி சங்க தலைவர் துரை மணி, ஆசிரிய பயிற்சி நிறுவன(DIET) முதுநிலை விரிவுரையாளர்  எம் .மாரியப்பனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக் கூறி நினைவு பரிசுவழங்கி கௌரவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top