Close
செப்டம்பர் 20, 2024 6:45 காலை

புதுகை நகராட்சி 27 வது வார்டு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை

புதுகை27 வது வார்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியன்

புதுக்கோட்டை நகராட்சிக்கு 27 -ஆவது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அப்பு (எ) கனகசபை வீடு வீடாகச்சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த வார்டில் ஆண், பெண் உள்பட மொத்தம் 2,992 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிமுக வர்த்தகர் அணி நிர்வாகியாக உள்ள இவர் 27 -வது வார்டில் 80 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற பாரம்பரியமிக்க ஸ்ரீபைரவர் ரைஸ்மில் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏ -வுமான நெடுஞ்செழியன்,  27 -வது வார்டுக்குள்பட்ட கீழ 2, 3 வீதிகள், சக்கரவர்த்தி அய்யங்கார் சந்து, ராணிஸ்கூல் சந்து, பெருமாள்கோவில்
வீதி, நெல்லுமண்டித் தெரு, தெற்கு 2, 3, 4 வீதிகள் மற்றும் வெள்ளையப்ப ராவுத்தர் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளருக்கு ஆதரவாக இரட்டைஇலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இதில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top