அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க அம்பேத்கர் பிறந்த நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறுதி ஏற்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக, பெண்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வந்த டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய 131 -ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணன், ஏஐடியுசி மாநில செயலாளர் சி. சந்திரகுமார், நிர்வாகிகள் தியாகராஜன், செல்வம், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் ஜனநாயக உரிமைகளை முற்றிலும் மறுக்கின்ற காவி பாசிச பயங்கரவாதத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பதுடன், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது.