Close
நவம்பர் 22, 2024 7:07 மணி

புதுக்கோட்டையில் களை கட்டிய மாம்பழங்கள் விற்பனை…

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள மாம்பழ ரகங்கள்

மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் புதுக்கோட்டையிலுள்ள பழக்கடைகளில்  மாம்பழங்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்க்கமுடிகிறது.                                                                                                                                                                                  புதுக்கோட்டையில் பழக்கடைகளிலும், சாலையோர கடைகளிலும் மாம்பழங்கள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள   மாம்பழங்களை பொதுமக்களும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

உள்ளூர் மட்டுமின்றி திண்டிவனம், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி,  ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா வட்டாரங் களில் இருந்தும் மாங்காய் மற்றும் மாம்பழ வரத்து உள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தற்போது முதல் பூ விட்டு மாங்காய் காய்க்க தொடங்கியுள்ள நிலையில் புதுக்கோட்டைக்கு மார்க்கெட்டுக்கு மாங்காய் ,மாம்பழங்கள்  வரத்து தொடங்கியுள்ளது.

தற்போது 2 முதல் 5 டன்கள் வரையே வரத்து உள்ளது.அடுத்த சில நாட்களில் முழுமையாக சீசன் களைக்கட்ட தொடங்கும் என்று வியாபாரிகள் நம்பக்கை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக  வடக்குராஜ வீதியிலுள்ள பழவியாபாரி    கோபி கூறியதாவது: இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருக்கும் என்று மாங்காய் சாகுபடியில் இறங்கியுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் விற்பனைக்கு வந்துள்ள மாம்பழங்கள்

அதனால் கடந்த ஆண்டை போல இல்லாமல் மாமரங்கள் காய்க்காமல் போய்விட்ட நிலையில்  மார்க்கெட்டுக்கு குறைந்த அளவுதான் மாங்காய், மாம்பழங்கள் வரத்து உள்ளது.திண்டிவனம் வட்டாரத்தில் இருந்து பங்கனப்பள்ளி, இமாம்பசந்த் ரகங்கள் மட்டுமே வருகின்றன. சீசன் முழுமையாக தொடங்கும்போது புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் மாங்காய் வரத்து இருக்கும் என்றார்.

செந்தூரா, பங்கனபள்ளி ரக மாம்பழம் கடைகளில்  சுமார் கிலோ ரூ.100 முதல்  ரூ.120-க்கு விற்பனையாகிறது. தற்போது சேலத்தில் இருந்து மாம்பழங்கள் வரத்து வரத் தொடங்கி உள்ளதாகவும், சீசன் மேலும் அதிகரித்தபின் மாம்பழங்கள் கூடுதலாக வரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top