Close
மே 11, 2024 9:41 மணி

புதுக்கோட்டை ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது

புதுக்கோட்டை

கல்விஅமைச்சரிடம் விருது பெற்ற புதுக்கோட்டை ஆசிரியர் பழனிசாமி

புதுக்கோட்டை அசோக்நகர் பள்ளி ஆசிரியர் பழனிச்சாமிக்கு அன்பாசிரியர் விருதை தமிழக கல்வி அமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகுடம் சூட்டும் அன்பாசிரியர் 2021 விருதுகளை ராமராஜ் காட்டன் நிறுவனத்துடன் இணைந்து இந்து தமிழ் திசை நாளிதழ் வழங்கியது.

 இதை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்புரை ஆற்றி விருதுகளை வழங்கினார். விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 532 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 425 முதல்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இறுதிச்சுற்று தேர்வு நடத்தப்பட்டு மூத்த கல்வியாளர்கள் அடங்கிய தேர்வுக் குழு மூலம்  46 பேர் விருதுக்கு மாவட்டத்திற்கு ஒருவர் தேர்வாகினர். இதில் புதுக்கோட்டை  அசோக் நகர் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பழனிச்சாமிக்கு அன்பாசிரியர் விருது  கல்வி அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி  வழங்கினார்.

புதுக்கோட்டை
அன்பாசிரியர் விருது பெற்ற புதுகை அசோக்நகர் பள்ளி ஆசிரியர் பழனிச்சாமி

விழாவில் பிரம்மோஸ் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, ராமராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன், லட்சுமி ஜெராக்ஸ் நிர்வாக இயக்குனர் முத்துராமன், இந்துஸ்தான் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி மையம் நிர்வாக அதிகாரி ஸ்ரீராம், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் தீனதயாளன், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் அருள்முருகன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் இந்து தமிழ் திசை வர்த்தகப் பிரிவு தலைவர் சுப்பிரமணியன், மேலாளர் ராஜ்குமார் இந்து தமிழ் திசை ஆசிரியர் அசோகன் மற்றும் குழுமத்தினர்  அனைவரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top