புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 110/33-11 KV நாகுடி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் பகுதிகளில் நாளை(11.7.2022) திங்கள்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அறந்தாங்கி உதவிசெயற்பொறியாளர் /நகர் – கே.தனபால் வெளியிட்ட தகவல்:
11 KV கட்டுமாவடி மின்பாதையில் உள்ள நாகுடி, காரவயல் புறங்காடு, ஏகனி வயல், ஏகப்பெருமகளூர், அத்தானி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், மேலாஸ்தானம் ஆகிய பகுதிகளிலும்.
11 KV ஆவுடையார்கோவில் மின்பாதையில் உள்ள நாகுடி, அறியமறக்காடு,காரணியேந்தல் தொண்டைமாநேந்தல், குடிக்காடு, வேட்டனூர்; மானநல்லூர், கிடங்கிவயல் செல்வநேந்தல் கீழ்குடிவாட்டாத்தூர், பட்டமுடையான, ஆகிய பகுதிகளில் வருகின்ற 11.07.2022 (திங்கட்கிழமை) அன்று சிறப்பு பராமரிப்பு பணிக்காக காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.