Close
ஜூலை 4, 2024 3:47 மணி

சோழவந்தானில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில் 2000 வாழை மரங்கள் சேதம்! விவசாயி வேதனை:

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முன்தினம் சூறை காற்றுடன் பெய்த கன மழைக்கு சோழவந்தான் வடகரை கண்மாய் பகுதியில் ஒரு மாதத்தில் பலனுக்கு வர இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான 2000 வாழை மரங்கள் சாய்ந்து சேதமானதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் .
இது குறித்து, விவசாயி தங்கப் பாண்டியன் கூறும்போது: ஒரு வாழை மரத்திற்கு ரூபாய் 150 வரை செலவு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் ஒரு வாழைத்தார் ரூபாய் 300க்கு விலை போகும்

இந்த நிலையில், நேற்று முன்தனம் சூறைக்காற்றுடன் பெய்த கன மழைக்கு சுமார் 2000 வாழை மரங்கள் காய்களுடன் சாய்ந்து நாசமானதால், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆறு லட்சம் மதிப்பிலான வாழை காய்கள் பிஞ்சு நிலையிலேயே சாய்ந்து விழுந்ததால், பலன் அளிக்காமல் போய்விட்டது. இதனால் ,சுமார் ஆறு லட்சம் ரூபாயும் ஒரு வருட உழைப்பும் வீணாகி விட்டது.
இந்த சேதம் முறித்து அரசு அதிகாரிகளும் வேளாண்மை துறையினரும் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய வேண்டும். அடுத்து விவசாயம் செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top