சிறந்த பேச்சு.”சொல்லும் கருத்துகள் தெளிவாக அழகான சொற்களில் தர்க்க முறைக்கு மாறுபடாது அனுபவத்துடன் எடுத்துக் காட்டுகளோடு, கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவுமாறு உணாச்சி தோன்ற, “உண்மைதான் சொல்வது “என்று கேட்பவர் உணரும்படி பேச்சு அமைந்திருக்க வேண்டும். இப்படி இருப்பது தான் சிறந்த பேச்சு. இதுதான் பேச்சின் இலக்கணமாகும்(பக்.48).
1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சியைப் பிறப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று, அண்ணா மற்றும் அவர் தம்பிகளின் பேச்சு வன்மைதான். 2014 -ஆம் நரேந்திர மோடி பிரதமராவதற்கும், அது இன்று வரை தொடர்வதற்கும் உரைவீச்சு தான் காரணம்.
லிங்கனின் கெட்டில்பர்க் உரையும், ‘எனக்கும் ஒரு கனவுண்டு ‘ என்ற மார்ட்டின் லூதரின் உரையும், “இந்தியா விதியோடு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தம்’ (tryst with destiny) என்ற நேருவின் முதல் சுதந்திர தின உரையும் காலந்தோறும் பேசும்.அப்படி காலந்தோறும் பேசும் உரையை எப்படி ஆற்றுவது, அதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நூல் தான் அ.கி.ப வின் (அல்லிக்குழி கிருஷ்ணசாமி பரந்தாமனின் (5.7.1902 – – 1986)
“பேச்சாளராக “அ.கி.ப . தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், வரலாற்றாசிரியர் என்று பணமுக ஆற்றல் மிக்கவர்.” மதுரை நாயக்கர் வரலாறு””நல்ல தமிழ் எழுத வேண்டுமா? “இரண்டு நூல்களும் காலந்தோறும் வழிகாட்டக்கூடியது.
பேச்சாளராக நூலில்மேடைப்பேச்சு வரலாறு – கிரேக்க டெமாஸ் தனிஸ் தொடங்கி அண்ணா வரை ,சிறந்த பேச்சின் இலக்கணம்?பேச்சை தொடங்குவது எப்படி? முடிப்பது எப்படி?நன்றி சொல்வதை சொற்பெருக்காற்றாமல் சொல்வது எப்படி?,
பேச்சாளருக்கு நினைவாற்றல் அவசியம், அதைப் பெருக்கும் வழிமுறைகள்,சில பேச்சாளர்களுக்கு மேடையும் ஒலிவாங்கியும் சரியாக இல்லை என்றால் பேச மாட்டார்கள், அதைத் தவிர்க்க மேடை அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? மேடை அமைப்பாளர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் – குறிப்பாக நேரத்தில் நாட்டம் வேண்டும் – போன்ற நல்ல பேச்சுக்கு தேவையான எல்லா இலக்கணங்களையும் எளிய அழகு தமிழில் நமக்கு சித்திரமாக்கித் தந்திருக்கிறார் அ.கி.ப. இறுதியாக இளம் பேச்சாளர்களுக்கு பயனளிக்கும் 21 குறிப்பு களையும் தந்துள்ளார்.
இந்த நூல் மேடைப்பேச்சாளருக்குத்தான் என்றில்லை. ஆசிரியர், வழக்கறிஞர், நேர்முகத் தேர்வுக்கு போகிறவர்களுக்கும் பயனுள்ளது.வெளியீடு-பாரி நிலையம், 184, பிராட்வே,சென்னை. விலை-ரூ.20.
# சா.விஸ்வநாதன்- வாசகர் பேரவை- புதுக்கோட்டை #